விராட் கோலியின் நேரம் முடிந்து விட்டது - இங்கிலாந்து முன்னாள் வீரர்


விராட் கோலியின் நேரம் முடிந்து விட்டது - இங்கிலாந்து முன்னாள் வீரர்
x

image courtesy: AFP

தினத்தந்தி 16 Jan 2025 8:31 AM IST (Updated: 16 Jan 2025 8:33 AM IST)
t-max-icont-min-icon

விராட் கோலி, அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் பந்துகளில் தொடர்ச்சியாக விக்கெட்டை இழந்து வருகிறார்

லண்டன்,

இந்திய அணி சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 0-3 என்ற கணக்கில் மோசமாக தோற்றதுடன், ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரையும் 1-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. இவ்விரு தொடரிலும் மூத்த வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் ரன் எடுக்க முடியாமல் திணறினர்.

இதில் குறிப்பாக விராட் கோலி தொடர்ச்சியாக அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் பந்துகளில் விக்கெட்டை இழந்து வருகிறார். அவருடைய சுமாரான ஆட்டம் சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமானது. அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. அதனால் கடுமையான விமர்சனங்களை அவர் சந்தித்துள்ளார்.

இந்நிலையில் விராட் கோலியால் இங்கிலாந்து தொடரில் அசத்த முடியாது என்று அந்நாட்டின் முன்னாள் வீரர் டேவிட் லாய்ட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "நாம் நம்முடைய சிறந்த காலத்தை கடந்து விட்டோம் என்பது விராட் கோலிக்கு தெரியும். அது வலியை கொடுக்கும். இங்கிலாந்துக்கு வரும்போது அவர் எங்கே செல்வார். அவுட் சைட் ஆப் ஸ்டம்ப் பந்துகளில் தடுமாறி ஸ்லிப் பகுதியில் கேட்ச் ஆவார். அது தேர்வாளர்களுக்கும் தெரியும். விராட் கோலி மகத்தான வீரர்களில் ஒருவர் ஆனால் அவர் தன்னுடைய சிறந்த காலத்தை கடந்து விட்டார். அவர் தன்னுடைய காலத்தை இழந்து விட்டார். அவருடைய நேரம் முடிந்து விட்டது. வயதால் இது வருகிறது.

அனைவரும் அவுட் சைடு பந்துகளை அடிக்காமல் விடுங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் அதைக்கூட அவரால் செய்ய முடியவில்லை. அவர் சிறந்த சர்வதேச வீரர். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து ஒரே மாதிரியாக அவுட்டானால் உங்களுடைய நேரம் முடிந்து விட்டது என்று அர்த்தம்" என்று கூறினார்.


Next Story