விஜய் ஹசாரே கோப்பை: பிளே-ஆப் சுற்றில் தமிழ்நாடு-ராஜஸ்தான் இன்று மோதல்
கோதாம்பி ஸ்டேடியத்தில் நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் தமிழ்நாடு, ராஜஸ்தானை எதிர்கொள்கிறது.
வதோதரா,
32-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. லீக் சுற்று முடிவில் குஜராத் , மராட்டியம் , கர்நாடகா, பஞ்சாப, விதர்பா , பரோடா ஆகிய அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்றன. 2-வது இடம் பிடித்த அரியானா , ராஜஸ்தான், தமிழ்நாடு, பெங்கால் ஆகிய அணிகள் காலிறுதிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி கண்டன.
இந்த நிலையில் குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று (வியாழக்கிமை) இரண்டு பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் கோதாம்பி ஸ்டேடியத்தில் நடைபெறும் ஒரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் தமிழ்நாடு, ராஜஸ்தானை எதிர்கொள்கிறது.
மோதி பாக் ஸ்டேடியத்தில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அரியானா, முன்னாள் சாம்பியன் பெங்காலை சந்திக்கிறது. இரு ஆட்டங்களும் காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
Related Tags :
Next Story