விஜய் ஹசாரே கோப்பை: தொடர் நாயகனாக கருண் நாயர் தேர்வு

விதர்பா அணியின் கேப்டன் கருண் நாயர் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
விதர்பா,
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கர்நாடகா - விதர்பா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற விதர்பா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கர்நாடகா அணி இதில் முதலில் பேட் செய்த கர்நாடக அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 348 ரன் குவித்தது. ரவிசந்திரன் ஸ்மாரன் 101 ரன்னும் (92 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்), அபினவ் மனோகர் 79 ரன்னும், கிருஷ்ணன் ஸ்ரீஜித் 78 ரன்னும் விளாசினர்.
பின்னர் 349 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய விதர்பா அணி 48.2 ஓவர்களில் 312 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரர் துருவ் ஷோரே சதம் (110 ரன், 111 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) அடித்தும் பலன் இல்லை. இதனால் கர்நாடக அணி 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது. ஏற்கனவே அந்த அணி 2014, 2015, 2018, 2020-ம் ஆண்டுகளிலும் இந்த பட்டத்தை வென்றிருந்தது.
இந்த நிலையில் , விதர்பா அணியின் கேப்டன் கருண் நாயர் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சிறப்பாக விளையாடிய கருண் நாயர் நடப்பு தொடரில் 5 சதம் உள்பட 779 ரன்கள் எடுத்துள்ளார். விஜய் ஹசாரே கோப்பை தொடர் ஒன்றில் கேப்டனாக 700 ரன்களுக்கு மேல் குவித்த முதல் வீரர் இவர் தான்.