விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்; கேரள அணியில் இடம் பெறாத சஞ்சு சாம்சன் - காரணம் என்ன..?


விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்; கேரள அணியில் இடம் பெறாத சஞ்சு சாம்சன் - காரணம் என்ன..?
x

கோப்புப்படம்

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது.

திருவனந்தபுரம்,

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது. இதையடுத்து ஒவ்வொரு மாநில கிரிக்கெட் நிர்வாகங்களும் இந்த தொடருக்கான அணிகளை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், இந்த தொடருக்கான கேரள அணியில் முன்னணி வீரரான சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை. இந்திய டி20 அணியில் தற்போது தொடக்க ஆட்டக்காரராக விளையாடி அபாரமாக செயல் திறனை சஞ்சு சாம்சன் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், அவரது சொந்த மாநில அணியான கேரள அணியில் அவரது பெயர் இடம் பெறாதது ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் சஞ்சு சாம்சன் ஏன் அந்த தொடரில் இடம்பெறவில்லை? என்பது குறித்து கேரள கிரிக்கெட் சங்கம் சார்பில் மூத்த அதிகாரி ஒருவர் விளக்கத்தை அளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சஞ்சு சாம்சன் தற்போதைக்கு போட்டியிலிருந்து விலகி இருக்கிறார்.

நாங்கள் அவரது பெயரை அணியிலிருந்து நீக்கவில்லை. இது அவருடைய தனிப்பட்ட முடிவு என்று தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சஞ்சு சாம்சன் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரில் விளையாடாமல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கேரள அணி விவரம்: சல்மான் நிசார் (கேப்டன்), ரோஹன் எஸ் குன்னும்மாள், ஷோன் ரோஜர், முகமது அசாருதீன் எம் (விக்கெட் கீப்பர்), ஆனந்த் கிருஷ்ணன், கிருஷ்ண பிரசாத், அகமது இம்ரான், ஜலஜ் சக்சேனா, ஆதித்யா சர்வதே, சிஜோமோன் ஜோசப், பாசில் தம்பி, பாசில் என் பி, நிதிஷ் எம்டி, ஈடன் ஆப்பிள் டாம் , ஷரபுதீன் என்.எம்., அகில் ஸ்காரியா, விஸ்வேஷ்வர் சுரேஷ், வைஷாக் சந்திரன், அஜ்னாஸ் எம் (விக்கெட் கீப்பர்).




Next Story