தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து கம்பீரை நீக்க முடிவு..? வெளியான தகவல்


தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து கம்பீரை நீக்க முடிவு..? வெளியான தகவல்
x

image courtesy: AFP

தினத்தந்தி 10 Nov 2024 2:11 AM IST (Updated: 10 Nov 2024 2:13 AM IST)
t-max-icont-min-icon

டிராவிட்டுக்கு பின் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டார்.

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். 2007 மற்றும் 2011 உலகக்கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக 2 கோப்பைகளை வென்ற அனுபவத்தைக் கொண்டுள்ளார். அத்துடன் 2024 சீசனில் ஆலோசகராக செயல்பட்ட அவர் 10 வருடங்கள் கழித்து கொல்கத்தா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினர்.

அதன் காரணமாக டி20 உலகக்கோப்பை வெற்றியுடன் ஓய்வு பெற்ற ராகுல் டிராவிட்டுக்கு பின் கவுதம் கம்பீர் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். அவருடைய தலைமையில் இலங்கை டி20 தொடரில் வென்ற இந்தியா ஒருநாள் தொடரில் 27 வருடங்கள் கழித்து தோற்றது. அதனால் முதல் சுற்றுப்பயணத்திலேயே கம்பீர் சில கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தார்.

அதைத்தொடர்ந்து வங்காளதேசத்துக்கு எதிராக 2 - 0 (2 போட்டிகள்) என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இந்தியா வென்றது. ஆனால் அதன்பின் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. இதனால் கம்பீர் மீது மிகுந்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் எதிர்வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா வெல்ல வேண்டும் என்று பிசிசிஐ விரும்புகிறது. ஒருவேளை ஆஸ்திரேலியாவில் வெல்ல தவறினால் இந்திய டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து கம்பீரை நீக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story