டெஸ்ட் கிரிக்கெட்: பும்ராவுக்கு எதிராக மாபெரும் சாதனை படைத்த சாம் கான்ஸ்டாஸ்


டெஸ்ட் கிரிக்கெட்: பும்ராவுக்கு எதிராக மாபெரும் சாதனை படைத்த சாம் கான்ஸ்டாஸ்
x
தினத்தந்தி 26 Dec 2024 9:25 AM IST (Updated: 26 Dec 2024 10:58 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் சாம் கான்ஸ்டாஸ் அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார்.

மெல்போர்ன்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பையின் 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணியில் சாம் கான்ஸ்டாஸ் அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார். இந்திய அணியில் ஒரே மாற்றமாக சுப்மன் கில்லுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதன்படி நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்சை தொடங்கியுள்ள ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக உஸ்மான் கவாஜா மற்றும் கான்ஸ்டாஸ் அறிமுக வீரராக களமிறங்கினர். தனது முதல் போட்டியிலேயே சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய சாம் கான்ஸ்டாஸ், இந்திய பந்துவீச்சை சிறப்பாக கையாண்டார்.

குறிப்பாக டெஸ்ட் தரவரிசையில் உலகின் நம்பர் 1 பவுலரான பும்ராவின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்ட அவர் அவரது ஓவரில் 2 சிக்சர்கள் விளாசினார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ராவின் பந்துவீச்சில் ஒரு இன்னிங்சில் 2 சிக்சர்கள் அடித்த 2-வது பேட்ஸ்மேன் என்ற சாதனையை கான்ஸ்டாஸ் படைத்துள்ளார். இதற்கு முன்னர் 2018-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பட்லர் 2 சிக்சர்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடியாக விளையாடிய கான்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் (6 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) அடித்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.


Next Story