வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்; வெஸ்ட் இண்டீஸ் 146 ரன்களில் ஆல் அவுட்


வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்; வெஸ்ட் இண்டீஸ் 146 ரன்களில் ஆல் அவுட்
x

Image Courtesy: @ICC

வங்காளதேசம் தரப்பில் நஹித் ராணா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஜமைக்கா,

வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் ஆட்டத்தில் வங்காளதேசம் தனது முதல் இன்னிங்சில் 30 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 69 ரன் எடுத்திருந்தது. வங்காளதேசம் தரப்பில் ஷத்மான் இஸ்லாம் 50 ரன்னுடனும், ஷஹாதத் ஹொசைன் திபு 12 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து நேற்று 2ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த வங்காளதேச அணியினர், வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இறுதியில் வங்காளதேசம் தனது முதல் இன்னிங்சில் 71.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 164 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஷத்மான் இஸ்லாம் 64 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில்ல் ஜெய்டன் சீல்ஸ் 4 விக்கெட், ஷமர் ஜோசப் 3 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 70 ரன்கள் எடுத்திருந்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் பிராத்வெய்ட் 33 ரன்னுடமும், கீசி கார்டி 19 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியினர், வங்காளதேசத்தின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சில் 146 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக கீசி கார்டி 40 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் நஹித் ராணா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் 18 ரன் முன்னிலையுடன் வங்காளதேசம் தனது 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.


Next Story