டி20 உலகக்கோப்பை: சூப்பர் 8 சுற்றில் இந்தியா எந்தெந்த அணியுடன் எப்போது ஆட்டம்? முழு விவரம்


டி20 உலகக்கோப்பை: சூப்பர் 8 சுற்றில் இந்தியா எந்தெந்த அணியுடன் எப்போது ஆட்டம்? முழு விவரம்
x

image courtesy: PTI

தினத்தந்தி 17 Jun 2024 9:09 AM GMT (Updated: 17 Jun 2024 9:24 AM GMT)

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று வரும் 19-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.

நியூயார்க்,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 1- ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் லீக் சுற்று இன்றுடன் நிறைவடைய உள்ளது. லீக் சுற்றில் தங்களது பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

அதன்படி இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. சூப்பர் 8 சுற்று வரும் 19-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.

சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1 பிரிவில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுடன் வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் 2 பிரிவில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துடன், வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோதும். முடிவில் தங்களது பிரிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்.

இந்நிலையில் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணியின் போட்டிகள் குறித்து இங்கு காண்போம்:-

1. இந்தியா - ஆப்கானிஸ்தான் - ஜூன் 20 - பார்படாஸ்

2. இந்தியா - வங்காளதேசம் - ஜூன் 22 - ஆண்டிகுவா

3. இந்தியா - ஆஸ்திரேலியா - ஜூன் 24 - எஸ்டி.லூசியா


Next Story