டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா


டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா
x
தினத்தந்தி 29 Jun 2024 8:25 PM IST (Updated: 29 Jun 2024 8:27 PM IST)
t-max-icont-min-icon

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.

பார்படாஸ்,

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் - விராட் கோலி களமிறங்கினர். இருவரும் இணைந்து முதல் ஓவரில் 15 ரன்கள் சேர்த்தனர். கேஷவ் மகராஜா 2-வது ஓவரில் முதல் 2 பந்துகளில் 2 பவுண்டரிகள் அடித்த ரோகித் 4 -வது பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பண்ட் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ரபடா வீசிய 3-வது ஓவரில் சூர்யா 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தற்போது வரை இந்திய அணி 5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 39 ரன்களுடன் தடுமாறி வருகிறது. விராட் கோலி 22 ரன்களுடனும்,அக்சர் படேல் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.


Next Story