டி20 உலகக்கோப்பை: அர்ஷ்தீப் சிங் அபாரம்... இந்திய அணிக்கு 111 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அமெரிக்கா


டி20 உலகக்கோப்பை: அர்ஷ்தீப் சிங் அபாரம்... இந்திய அணிக்கு 111 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அமெரிக்கா
x
தினத்தந்தி 12 Jun 2024 4:14 PM GMT (Updated: 12 Jun 2024 4:27 PM GMT)

இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட் , ஹர்திக் பாண்டியா 2 விக்கெட் வீழ்த்தினர்

நியூயார்க்,

9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 'ஏ' பிரிவு ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி , அமெரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக ஷயான் ஜஹாங்கீர், ஸ்டீவன் டெய்லர் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் ரன் எதுவும் எடுக்காமல் ஜஹாங்கீர் , அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஆண்ட்ரிஸ் கௌஸ் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.பின்னர் ஸ்டீவன் டெய்லர், நிதிஸ் குமார் சிறப்பாக அடி ரன்கள் குவித்தனர். நிலைத்துஆடிய ஸ்டீவன் டெய்லர் 24 ரன்களும் , நிதிஸ் குமார் 27 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து கோரி ஆண்டர்சன் 14 ரன்களுக்கு வெளியேறினார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் அமெரிக்கா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4விக்கெட் , ஹர்திக் பாண்டியா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 111 ரன்கள் இலக்குடன் இந்திய அணி விளையாடுகிறது.


Next Story