தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்; பாகிஸ்தான் அணி அறிவிப்பு


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்; பாகிஸ்தான் அணி அறிவிப்பு
x

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டவுன்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.இந்த தொடர் வரும் 10ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகள் நடைபெறுகிறது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான் (கேப்டன் ), அப்ரார் அகமது, பாபர் அசாம், ஹாரிஸ் ரவுப், ஜஹந்த் கான், முகமது அப்பாஸ் அப்ரிடி, முகமது ஹஸ்னைன், முஹம்மது இர்பான் கான், உமைர் பின் யூசுப், சைம் அயூப், சல்மான் அலி அகாடி, சுஹீன் அலி ஆகா, மொகிம், தயப் தாஹிர் மற்றும் உஸ்மான் கான் .


Next Story