டி20 கிரிக்கெட்; ஜாக்கர் அலி அதிரடி அரைசதம்... வங்காளதேசம் 189 ரன்கள் குவிப்பு


டி20 கிரிக்கெட்; ஜாக்கர் அலி அதிரடி அரைசதம்... வங்காளதேசம் 189 ரன்கள் குவிப்பு
x

Image Courtesy: @BCBtigers / @windiescricket

வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஜாக்கர் அலி 72 ரன்கள் எடுத்தார்.

செயிண்ட் வின்செண்ட்,

வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரு ஆட்டங்களில் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லிட்டன் தாஸ் மற்றும் பர்வேஸ் ஹொசைன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் லிட்டன் தாஸ் 14 ரன்னிலும், அடுத்து வந்த தன்சித் ஹசன் 9 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து மெஹதி ஹசன் மிராஸ் களம் இறங்கினார்.

மெஹதி ஹசன் மிராஸ் - பர்வேஸ் ஹொசைன் இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. இதில் பர்வேஸ் ஹொசைன் 39 ரன்னிலும், மெஹதி ஹசன் மிராஸ் 29 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் இறங்கிய ஜாக்கர் அலி ஒரு புறம் நிலைத்து நின்று ஆடினார். ஆனால், மறுபுறம் களம் இறங்கிய ஷமிம் ஹொசைன் 2 ரன்னிலும், மகேதி ஹசன் ரன் எடுக்காமலும், தன்சிம் ஹசன் சாகிப் 17 ரன்னிலும் அவுட் ஆகினர்.

மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய ஜாக்கர் அலி அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் வங்காளதேசம் 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 189 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஜாக்கர் அலி 72 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரொமாரியோ ஷெப்பர்ட் 2 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 190 ரன் என்ற இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் ஆடி வருகிறது.


Next Story