டி20 கிரிக்கெட்; வெஸ்ட் இண்டீஸ் அபார பந்துவீச்சு...வங்காளதேசம் 129 ரன்கள் சேர்ப்பு


டி20 கிரிக்கெட்; வெஸ்ட் இண்டீஸ் அபார பந்துவீச்சு...வங்காளதேசம் 129 ரன்கள் சேர்ப்பு
x

Image Courtesy: @BCBtigers / @windiescricket

வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஷமிம் ஹொசைன் 35 ரன்கள் எடுத்தார்.

செயின்ட் வின்சென்ட்,

வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

தொடர்ந்து வங்காளதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக லிட்டன் தாஸ் மற்றும் சவுமியா சர்கார் ஆகியோர் களம் இறங்கினர். இதில் லிட்டன் தாஸ் 3 ரன்னிலும், சவுமியா சர்கார் 11 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் புகுந்த வங்காளதேச அணியினர் வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.

இதில் தன்சித் ஹசன் 2 ரன்னிலும், மெஹதி ஹசன் மிராஸ் 26 ரன்னிலும், ஜேக்கர் அலி 21 ரன்னிலும், ரிஷாத் ஹொசைன் 5 ரன்னிலும், மெஹதி ஹசன் 11 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதி கட்டத்தில் அதிரடி காட்டிய ஷமிம் ஹொசைன் 35 ரன்கள் எடுத்தார்.

இறுதியில் வங்காளதேசம் 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக ஷமிம் ஹொசைன் 35 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் குடகேஷ் மோடி 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 130 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் ஆடி வருகிறது.


Next Story