டி20 கிரிக்கெட்: ஜிம்பாப்வேவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு


டி20 கிரிக்கெட்: ஜிம்பாப்வேவுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு
x

Image Courtesy: @ZimCricketv

தினத்தந்தி 6 July 2024 10:42 AM GMT (Updated: 6 July 2024 10:52 AM GMT)

இந்த தொடருக்கான இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹராரே,

இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி சுப்மன் கில் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி ஹராரேயில் இன்று நடைபெறுகிறது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் அபிஷேக் சர்மா, ரியான் பராக், துருவ் ஜூரெல் ஆகியோர் அறிமுக வீரர்களாக களம் இறங்குகின்றனர்.


Next Story