தென் ஆப்பிரிக்கா - இலங்கை 2வது டெஸ்ட் நாளை தொடக்கம்
தொடரில் 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது.
கேப்டவுன்,
இலங்கை கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் ஆகும், இதில் கடந்த 27ம் தேதி தொடங்கிய முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 233 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில் , இரு அணிகளுக்கும் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது . இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற தென் ஆப்பிரிக்க அணி முனைப்பு காட்டும் அதேவேளை இந்த போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் நோக்கில் இலங்கை விளையாடும்.
Related Tags :
Next Story