எஸ்.ஏ.20 ஓவர் லீக்; எம்.ஐ. கேப்டவுன் அணியை வீழ்த்திய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்


எஸ்.ஏ.20 ஓவர் லீக்; எம்.ஐ. கேப்டவுன் அணியை வீழ்த்திய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்
x

ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் தரப்பில் அதிகபட்சமாக டு பிளெஸ்சிஸ் 30 ரன் எடுத்தார்.

ஜோகன்ஸ்பர்க்,

ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இதன் 3வது சீசன் கடந்த 9ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் - எம்.ஐ.கேப்டவுன் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த எம்.ஐ. கேப்டவுன் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 140 ரன்கள் எடுத்தது. எம்.ஐ.கேப்டவுன் தரப்பில் அதிகபட்சமாக ஜார்ஜ் லிண்டே 48 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 141 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜோபர்க் அணி களம் கண்டது.

ஜோபர்க் அணி 5.2 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 37 ரன் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை நின்ற பின்னர் ஆட்டம் தொடங்கியது. அப்போது ஜோபர்க் அணிக்கு 19 ஓவரில் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதையடுத்து ஜோபர்க் அணி தொடர்ந்து பேட்டிங் செய்தது.

ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் 11.3 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 82 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் மழை பெய்தது. மழை தொடர்ந்து பெய்ததால் டி.எல்.எஸ். முற கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி 6 ரன் வித்தியாசத்தில் ஜோபர்க் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஜோபர்க் தரப்பில் அதிகபட்சமாக டு பிளெஸ்சிஸ் 30 ரன் எடுத்தார்.


Next Story