எஸ்.ஏ.20 ஓவர் லீக்; 3வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியீடு


எஸ்.ஏ.20 ஓவர் லீக்; 3வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியீடு
x

image courtesy: @SunrisersEC

தினத்தந்தி 2 Sep 2024 1:30 PM GMT (Updated: 2 Sep 2024 1:31 PM GMT)

எஸ்.ஏ.20 ஓவர் லீக் தொடரின் 3வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

கேப்டவுன்,

ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் (எஸ்.ஏ.20 ஓவர் லீக்) கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகின்றன. இந்த 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

இந்த தொடரில் இதுவரை இரண்டு சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அந்த இரு சீசன்களிலும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த தொடரின் 3வது சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி தொடங்கி பிப்ரவரி 8ம் தேதி வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. பிப்ரவரி 9ம் தேதி இறுதிப்போட்டியின் ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தொடரின் போட்டி அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 9ம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன்கேப் - எம்.ஐ.கேப்டவுன் அணிகள் மோத உள்ளன. லீக் சுற்று போட்டிகள் ஜனவரி 9ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி நடைபெறுகின்றன.

இதையடுத்து முதலாவது தகுதி சுற்று ஆட்டம் பிப்ரவரி 4ம் தேதியும், எலிமினேட்டர் ஆட்டம் பிப்ரவரி 5ம் தேதியும், 2வது தகுதி சுற்று ஆட்டம் பிப்ரவரி 6ம் தேதியும், இறுதிப்போட்டி பிப்ரவரி 8ம் தேதியும் நடைபெற உள்ளன. பிப்ரவரி 9ம் தேதி இறுதிப்போட்டியின் ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.




Next Story