ரூ. 70 ஆயிரம் கோடி சொத்து: இந்தியாவை சேர்ந்த உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர் ஓய்வு அறிவிப்பு
முதல் தர கிரிக்கெட்டில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடியுள்ள இவர் 9 போட்டிகளில் 414 ரன்கள் அடித்துள்ளார்.
புதுடெல்லி,
கிரிக்கெட் உலகின் பணக்கார வீரராக அறியப்படுவர் இந்தியாவை சேர்ந்த ஆர்யமான் பிர்லா (வயது 22). இவர் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லாவின் மகன் ஆவார். முதல் தர கிரிக்கெட்டில் மத்திய பிரதேச அணிக்காக விளையாடியுள்ள இவர் 9 போட்டிகளில் 414 ரன்கள் அடித்துள்ளார். இதில் இரண்டு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடங்கும்.
2018 ஐ.பி.எல். ஏலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.30 லட்சத்துக்கு வாங்கியது. இருப்பினும் அவர் 2019-ல் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார்.
அதன்பின் களத்திற்கு திரும்பாத அவர் இன்று கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ஏறக்குறைய ரூ. 70,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story