ரஞ்சி கோப்பை அரையிறுதி: மும்பைக்கு எதிராக முதல் நாளில் விதர்பா 308 ரன்கள் குவிப்பு


ரஞ்சி கோப்பை அரையிறுதி: மும்பைக்கு எதிராக முதல் நாளில் விதர்பா 308 ரன்கள் குவிப்பு
x

image courtesy: PTI

இதில் நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் கேரளா - குஜராத் அணிகள் விளையாடுகின்றன.

நாக்பூர்,

90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்குகிறது. 32 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரில் லீக் மற்றும் காலிறுதி சுற்று ஆட்டங்களின் முடிவில் குஜராத், கேரளா, விதர்பா மற்றும் மும்பை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இந்நிலையில் அரையிறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கின.

இதில் நாக்பூரில் நடைபெற்று வரும் ஒரு அரையிறுதி ஆட்டத்தில் மும்பை - விதர்பா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி ஆரம்பம் முதலே சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன அதர்வா தைடே (4 ரன்கள்) விரைவில் ஆட்டமிழந்தாலும், பின்னர் களமிறங்கிய வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தனர்.

துருவ் ஷோரே (74 ரன்கள்), டேனிஷ் மாலேவார் (79 ரன்கள்), கருண் நாயர் (45 ரன்கள்) ஆகியோரின் கணிசமான பங்களிப்புடன் விதர்பா முதல் நாளில் 5 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் குவித்துள்ளது. யாஷ் ரத்தோட் 47 ரன்களுடனும், அக்ஷய் 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மும்பை தரப்பில் ஷாம்ஸ் முலானி மற்றும் ஷிவம் துபே தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளனர். நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

இதில் நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் கேரளா - குஜராத் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சை தொடங்கிய கேரளா முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் அடித்துள்ளது.


Next Story