பெர்த் டெஸ்ட்; சதம் விளாசினார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்

Image Courtesy: AFP
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் போட்டி பெர்த் மைதானத்தில் மைதானத்தில் நடைபெற்று வருகிறது
பெர்த்,
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை (2024-25) தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 104 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக ஸ்டார்க் 26 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய 2வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் இந்திய அணி நேற்று வரை 218 ரன்கள் முன்னிலை பெற்றது. ஜெய்ஸ்வால் 90 ரன்களும் , கே.எல். ராகுல் 62 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். இன்று 3ம் நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய அணியினர் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார். ஆஸ்திரேலியாவில் அவரது முதல் சதம் இதுவாகும்.