'பேப்பரில் மட்டுமே புலி' இந்திய அணியை விமர்சித்த பாக். முன்னாள் வீரர்


பேப்பரில் மட்டுமே புலி இந்திய அணியை விமர்சித்த பாக். முன்னாள் வீரர்
x
தினத்தந்தி 27 Oct 2024 8:21 PM IST (Updated: 27 Oct 2024 8:24 PM IST)
t-max-icont-min-icon

46க்கு ஆல் அவுட்டான பின் மீண்டு வந்து இந்தியா வெல்லும் என்று ரோகித் தெரிவித்ததாக அகமது சேஷாத் தெரிவித்துள்ளார்.

கராச்சி,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெங்களூருவில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே புனேயில் கடந்த 24-ம் தேதி தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டி 3-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது. இதில் 113 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் 46க்கு ஆல் அவுட்டான பின் மீண்டும் வந்து இந்தியா வெல்லும் என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்ததாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் அகமது சேஷாத் தெரிவித்துள்ளார். ஆனால் தரமான வலுவான வீரர்கள் இருந்தும் அதை செய்யாத இந்திய அணியினர் பேப்பரில் மட்டுமே புலியாகவும் களத்தில் நொறுங்கிய செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கிண்டலடித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:-"பேப்பரில் புலியாக இருப்பவர்கள் சொந்த மண்ணில் நொறுங்கியுள்ளனர். 46க்கு ஆல் அவுட்டான பின் அனைவருக்கும் மோசமான நாள் இருக்கும் என்று ரோகித் சர்மா தெரிவித்தார். அதை நாம் ஏற்றுக் கொண்டோம். அது நியாயமானது. ஆனால் இந்த போட்டியிலும் (2வது போட்டி) நீங்கள் விளையாடிய விதம் மெத்தனமாகி விட்டீர்கள் போல் இருந்தது. தேவையற்ற பேச்சில் நம்பிக்கை இல்லை என்று ரோகித் சர்மா தெரிவித்திருந்தார். ஆனால் கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் அந்த உணர்வு தெரியவில்லை. அந்த 2 போட்டிகளிலும் இந்திய அணியினர் பள்ளி சிறுவர்கள் விளையாடியதைப்போல் விளையாடினர்" என்று கூறினார்.


Next Story