இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு
![இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு](https://media.dailythanthi.com/h-upload/2025/02/06/37877968-untitled-1.webp)
டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார்
நாக்பூர்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் நடக்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்தியா:
ரோகித் சர்மா , யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர், கில், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், முகமது ஷமி.
இங்கிலாந்து :
பென் டக்கெட், பிலிப் சால்ட், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், சாகிப் மஹ்மூத்.