ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டி; வங்காளதேச கேப்டன் விலகல்

Image Courtesy: AFP
வங்காளதேசம் - ஆப்கானிஸ்தான் இடையிலான 3வது ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் இன்று நடைபெற உள்ளது.
ஷார்ஜா,
ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானும், 2வது போட்டியில் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில், தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இருந்து வங்காளதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ. இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story