ஒருநாள் கிரிக்கெட்: அறிமுகம் ஆன முதல் போட்டியிலேயே 2-வது வீரராக சாதனை பட்டியலில் இணைந்த வருண் சக்ரவர்த்தி


ஒருநாள் கிரிக்கெட்: அறிமுகம் ஆன முதல் போட்டியிலேயே 2-வது வீரராக சாதனை பட்டியலில் இணைந்த வருண் சக்ரவர்த்தி
x

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் வருண் சக்ரவர்த்தி அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார்.

கட்டாக்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் நாக்பூரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி அறிமுக வீரராக களமிறங்கியுள்ளார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வயதில் அறிமுகம் ஆன 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை வருண் சக்ரவர்த்தி படைத்துள்ளார்.

அந்த பட்டியல்:-

1.பரூக் இன்ஜினியர் - 36 வயது 138 நாட்கள்

2. வருண் சக்ரவர்த்தி - 33 வயது 164 நாட்கள்

3. அஜித் வடேகர் - 33 வயது 103 நாட்கள்

4. திலீப் தோஷி - 32 வயது 350 நாட்கள்

5. சையத் அபித் அலி - 32 வயது 307 நாட்கள்


Next Story