இந்தியாவுக்கு எதிராக ரன் அடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது - டிராவிஸ் ஹெட்


இந்தியாவுக்கு எதிராக ரன் அடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது - டிராவிஸ் ஹெட்
x

இந்தியாவுக்கு எதிராக ரன் அடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார்.

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இரு டெஸ்ட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

இதனிடையே, இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டெஸ்ட் பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நேற்று தொடங்கியது. ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது. முதல் நாளில் 19 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டது. பின்னர், 2ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

2ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 405 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் டிராவிஸ் ஹெட் 152 ரன்களையும், ஸ்மித் 101 ரன்களையும் குவித்து அவுட் ஆகினர்.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக ரன் அடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று 152 ரன்கள் குவித்த டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். 2ம் நாள் ஆட்டநேர முடிவுக்குபின் டிராவிஸ் ஹெட் கூறுகையில், ஜஸ்பிரித் பும்ராவின் சிறந்த பந்துகளை சமாளித்தது என் அதிர்ஷ்டம். அவர் சிறந்த பவுன்சர்களை வீசினார். அவர் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய பந்துகளை வீசுபவர்.

நான் பும்ராவுக்கு எதிராக நேர்மறையான மனநிலையுடன் விளையாடினாலே போதும். அவருக்கு எதிராக நான் ரன் அடிக்க வேண்டும் என்றில்லை. அவரது பந்துவீச்சின்போது மிகவும் முன்னெச்சரிக்கையாக தடுப்பாட்டத்தை ஆடினாலே போதும். நாங்கள் இந்தியாவுக்கு எதிராக நிறைய முறை விளையாடியுள்ளோம். இந்தியாவுக்கு எதிராக ரன் அடிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அடிலெய்டு, பெர்த் டெஸ்ட்டில் நான் சிறப்பாக ஆடினாலும் இங்கு மீண்டும் எனது ஆட்டத்தை வெளிப்படுத்துவது சிறப்பானதாக உள்ளது' என்றார்.


Next Story