என்னை விட அவர் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகர் - ஆஸ்திரேலிய பிரதமர்


என்னை விட அவர் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகர் - ஆஸ்திரேலிய பிரதமர்
x
தினத்தந்தி 3 Dec 2024 8:46 AM IST (Updated: 3 Dec 2024 8:48 AM IST)
t-max-icont-min-icon

இந்திய கிரிக்கெட் வீரர்களை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் நேரில் சந்தித்து பேசினார்.

கான்பெர்ரா,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கனக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி வரும் 6-ம் தேதி பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வெற்றியும் பெற்றது.

இந்த பயிற்சி ஆட்டத்திற்கு முன்பாக இந்திய வீரர்கள் ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பானீஸை நேரில் சந்தித்தனர். ஆஸ்திரேலிய நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது இந்திய வீரர்களுடன் ஆண்டனி அல்பானீஸ் ஜாலியாக கலந்துரையாடினார். அப்போது அவர் மற்ற வீரர்களை காட்டிலும் விராட் கோலியிடம் அதிகமாக பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் தம்முடைய மருத்துவர் தம்மை விட விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகர் என்று ஆண்டனி அல்பானீஸ் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "என்னுடைய தனிப்பட்ட மருத்துவர் விராட் கோலியின் மிகப்பெரிய ரசிகர். அவருக்கு விராட் கோலியை எந்தளவுக்கு பிடிக்கும் என்பதை வார்த்தைகளால் விவரிப்பது கொஞ்சம் கடினம். அவரை சமீபத்தில் பார்த்தபோது விராட் கோலியை நான் பார்க்கப் போகிறேன் என்று கூறினேன். அப்போது விராட் கோலியிடம் ஒரு ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டு வாருங்கள் என்று அவர் என்னிடம் சொன்னார்" என கூறினார்.


Next Story