மிட்செல், பிரேஸ்வெல் அரைசதம்... நியூசிலாந்து 172 ரன்கள் குவிப்பு


மிட்செல், பிரேஸ்வெல் அரைசதம்... நியூசிலாந்து 172 ரன்கள் குவிப்பு
x

image courtesy; AFP  

நியூசிலாந்து தரப்பில் டேரில் மிட்செல் 62 ரன்னும், மைக்கேல் பிரேஸ்வெல் 59 ரன்னும் எடுத்தனர்.

மவுண்ட் மவுங்கானுய்,

இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டி20 போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி மவுண்ட் மவுங்கானுயில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இலங்கை முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. தொடர்ந்து நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிம் ராபின்சன் மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் களம் இறங்கினர். இதில் ராபின்சன் 11 ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா 8 ரன்னிலும் அவுட் ஆகினர்.

தொடர்ந்து களம் இறங்கிய மார்க் சாம்ப்மென் 15 ரன்னிலும், க்ளென் பிலிப்ஸ் 8 ரன்னிலும், மிட்செல் ஹே ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் நியூசிலாந்து 65 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து டேரில் மிட்செல் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இருவரும் அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் டேரில் மிட்செல் 62 ரன்னிலும், மைக்கேல் பிரேஸ்வெல் 59 ரன்னிலும் அவுட் ஆனார். இறுதியில் நியூசிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 172 ரன்கள் எடுத்துள்ளது.

இலங்கை தரப்பில் பினுரு பெர்னாண்டோ, மகேஷ் தீக்சனா, வனிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 173 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை ஆட உள்ளது.


Next Story