டாசில் தோல்வியை சந்தித்தது எங்களுக்கு சாதகமாக அமைந்தது - டாம் லாதம்


டாசில் தோல்வியை சந்தித்தது எங்களுக்கு சாதகமாக அமைந்தது - டாம் லாதம்
x

Image Courtesy: AFP

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

பெங்களூரு,

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்டடெஸ்ட், தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. 2வது டெஸ்ட் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் அளித்த பேட்டியில் கூறியதாவது,

உண்மையிலேயே இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் நாங்கள் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தோம். இந்த போட்டியில் டாசில் தோல்வியை சந்தித்தது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. நாங்கள் டாசில் வெற்றி பெற்றிருந்தாலும் முதலில் பேட்டிங்கை தான் தேர்வு செய்திருப்போம். ஆனால் டாசில் தோற்று முதலில் பந்து வீசிய போது எங்களது பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி எங்களை போட்டியின் ஆரம்பத்திலேயே முன்னுக்கு கொண்டு வந்தனர்.

இந்த போட்டியின் மூன்றாவது இன்னிங்ஸில் இந்திய அணி நிச்சயம் வலுவான கம்பேக் கொடுக்கும் என்பது நாங்கள் எதிர்பார்த்தோம். அந்த வகையில் இந்திய அணியும் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தது. இருந்தாலும் எங்களது பந்துவீச்சாளர்கள் தொடர்ச்சியாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதால் இந்திய அணியை 100 ரன்களுக்கு சுருட்ட முடிந்தது.

இந்த போட்டியில் பந்துவீச்சாளர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டம் கடந்த சில மாதங்களாகவே வேறு லெவலில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story