ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை: அரையிறுதி சுற்று முழு விவரம்

image courtesy: twitter/@ICC
அரையிறுதி சுற்று நாளை ஆரம்பமாக உள்ளது.
கோலாலம்பூர்,
2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் லீக் மற்றும் சூப்பர் 6 சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
அரையிறுதி சுற்று கோலாலம்பூரில் நாளை தொடங்க உள்ளது. அரையிறுதி ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா- ஆஸ்திரேலியா, இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
அரையிறுதி சுற்று முழு விவரம் பின்வருமாறு:-
முதல் அரையிறுதி: தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா - காலை 8 மணி
2-வது அரையிறுதி: இந்தியா - இங்கிலாந்து - பகல் 12 மணி.
இதில் இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story