ஐ.பி.எல். மெகா ஏலம்: 13 வயது இளம் வீரரை எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ்
ஐ.பி.எல். தொடரின் 2-ம் நாள் மெகா ஏலம் தொடங்கியது.
ஜெட்டா,
ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களின் 2 நாள் ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று தொடங்கியது. 7 மணி நேரம் நடந்த முதல் நாள் ஏலத்தில் 24 வெளிநாட்டவர் உள்பட 72 வீரர்கள் மொத்தம் ரூ.467.95 கோடிக்கு விற்கப்பட்டனர். இதில் 20 வீரர்கள் ரூ.10 கோடிக்கு மேல் விலை போனது வியப்பூட்டியது. ரிஷப் பண்ட் (ரூ.27 கோடி, லக்னோ), ஸ்ரேயாஸ் அய்யர் (ரூ.26¾ கோடி, பஞ்சாப்) ஆகியோர் புதிய உச்சத்தை தொட்டனர்.
இந்நிலையில் 2-வது நாள் மெகா ஏலம் தொடங்கியது. இதில் முதல் வீரராக ரோவ்மன் பவலை கொல்கத்தா அணி ரூ. 1.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இந்திய இளம் வீரரான பிரித்வி ஷாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை.
உள்ளூர் வீரரான அன்ஷுல் கம்போஜை ஏலத்தில் எடுக்க சென்னை - மும்பை அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவின. இறுதியில் சென்னை அணி ரூ. 3.40 கோடிக்கு அவரை ஏலத்தில் வாங்கியது.
ஸ்டீவ் சுமித், அல்சாரி ஜோசப், சிக்கந்தர் ராசா, பதும் நிசாங்கா, பிரண்டன் கிங், கஸ் அட்கின்சன், கைல் மேயர்ஸ், சர்பராஸ் கான், நவ்தீப் சைனி, ஜேசன் பெர்ஹண்ட்ராப், மேத்யூ ஷார்ட், போன்ற முன்னணி வீரர்களை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஜேமி ஓவர்டனை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 1.5 கோடிக்கு வாங்கியுள்ளது.
ஐ.பி.எல். வரலாற்றில் மிக குறைந்த வயதில் ஏலப்பட்டியலில் இடம்பெற்றிருந்த வைபவ் சூர்யவன்ஷியை (வயது 13) ரூ. 1.1 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியுள்ளது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த வயதில் வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
Live Updates
- 25 Nov 2024 8:15 PM IST
தில்ஷன் மதுஷங்கா, ஆடம் மில்னே, லுங்கி நிகிடி, வில்லியம் ஒ ரூர்க், சேத்தன் சக்காரியா, சந்தீப் வாரியர் ஆகியோரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை.
- 25 Nov 2024 8:07 PM IST
உள்ளூர் வீரரான பிரியன்ஷ் ஆர்யா மீது நிறைய அணிகள் ஆர்வம் காட்டின. இதனால் அவரது அடிப்படை விலையிலிருந்து (ரூ.30 லட்சம்) கிடுகிடுவென உயர்ந்து கொண்டே சென்றார். இறுதியில் ரூ. 3.8 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை வாங்கியது.
- 25 Nov 2024 8:03 PM IST
நமன் திவாரி, திவேஷ் சர்மா, குல்வந்த் கெஜ்ரோலியா, எமன்ஜோத் சாஹல், சல்மான் நிசார், ஷிவம் மாவி போன்ற நிறைய உள்ளூர் வீரர்கள் மீது எந்த அணிகளும் ஆர்வம் காட்டவில்லை.
- 25 Nov 2024 7:59 PM IST
இங்கிலாந்து வீரரான ஜேக்கப் பெத்தேலை பெங்களூரு அணி ரூ. 2.6 கோடிக்கு வாங்கியுள்ளது.
- 25 Nov 2024 7:57 PM IST
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களான பிரைடன் கார்சை ரூ. 1 கோடிக்கு ஐதராபாத் வாங்கியுள்ளது.
- 25 Nov 2024 7:55 PM IST
இலங்கை வீரரான துஷ்மந்த் சமீராவை டெல்லி அணி ரூ. 75 லட்சத்திற்கு வாங்கியுள்ளது.
- 25 Nov 2024 7:54 PM IST
உள்ளூர் வீரர்களான முஷீர் கான் மற்றும் சூர்யன்ஷ் ஷெட்ஜ் இருவரையும் பஞ்சாப் கிங்ஸ் தலா ரூ. 30 லட்சத்திற்கு வாங்கியுள்ளது.
- 25 Nov 2024 7:52 PM IST
உள்ளூர் வீரர்களான ராஜ் அங்கத் பாவா மற்றும் அனிகேட் வர்மா ஆகியோர் அடிப்படை விலைக்கே (ரூ. 30 லட்சம்) மும்பை மற்றும் ஐதராபாத் அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர்.
- 25 Nov 2024 7:51 PM IST
வெஸ்ட் இண்டீஸ் வீரரான ஷமர் ஜோசப்பை ரூ. 75 லட்சத்திற்கு லக்னோ மீண்டும் தனதாக்கியுள்ளது.
- 25 Nov 2024 7:49 PM IST
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லீசை ரூ. 2 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியுள்ளது.