ஐ.பி.எல்.: மும்பை அணியிலிருந்து அல்லா கசன்பர் விலகல்.. மாற்று வீரர் சேர்ப்பு

இந்த வருட ஐ.பி.எல். தொடரிலிருந்து அல்லா கசன்பர் விலகியுள்ளார்.
மும்பை,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது.10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக (கடந்த நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.
இதில் ஆப்கானிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அல்லா கசன்பரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 4.8 கோடிக்கு வாங்கியது. இருப்பினும் காயம் காரணமாக அல்லா கசன்பர் இந்த வருட ஐ.பி.எல். சீசனிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மற்றொரு ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான முஜீப் உர் ரஹ்மானை மும்பை நிர்வாகம் அணியில் சேர்த்துள்ளது.
Related Tags :
Next Story