ஐ.பி.எல்.2025: பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இவர்கள்தான் - தலைமை பயிற்சியாளர் தகவல்


ஐ.பி.எல்.2025: பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இவர்கள்தான் - தலைமை பயிற்சியாளர் தகவல்
x

பெங்களூரு அணி, மெகா ஏலத்திற்கு முன் 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்திருந்தது.

பெங்களூரு,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக ( நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.

இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ஏலத்திற்கு முன்பாக விராட் கோலி, ரஜத் படிதார் மற்றும் யாஷ் தயாள் ஆகிய 3 வீரர்களை மட்டுமே தக்க வைத்திருந்தது. அதுபோக ஏலத்தில் பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டன் , புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட முன்னணி வீரர்களை வாங்கியுள்ளது.

விராட் கோலி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 17 சீசன்களாக ஒரு கோப்பையை கூட வெல்லவில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த அணிகளில் ஒன்றாக உள்ளது. அதனால் இம்முறை கோப்பையை வென்று ரசிகர்களின் நீண்ட கால ஏக்கத்தை அந்த அணி நீக்குமா? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளரான ஆண்டி பிளவர் அடுத்த ஐ.பி.எல். சீசனுக்கான தங்களது திட்டம் குறித்து முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் பில் சால்ட் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.


Next Story