ஐ.பி.எல். 2025: ராஜஸ்தான் தலைமை பயிற்சியாளர் டிராவிட்டுக்கு காயம்.. அணியுடன் இணைவது எப்போது..?


ஐ.பி.எல். 2025: ராஜஸ்தான் தலைமை பயிற்சியாளர் டிராவிட்டுக்கு காயம்.. அணியுடன் இணைவது எப்போது..?
x

image courtesy:twitter/@rajasthanroyals

நடப்பாண்டிற்கான ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் உள்ளார்.

பெங்களூரு,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல். -ம் 18-வது சீசன் வருகிற 22-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இதன் தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது.

இந்த சீசனுக்கான ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய முன்னாள் வீரரான ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பெங்களூருவில் கிரிக்கெட் விளையாடிய ராகுல் டிராவிட்டுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது காயத்திலிருந்து மீண்டு வரும் அவர் இன்று அணியுடன் இணைவார் என்று ராஜஸ்தான் அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.


Next Story