ஐ.பி.எல். 2025; உள்ளூர் போட்டிகளைக் காண மாநகரப் பேருந்துகளில் இலவச பயணம்


ஐ.பி.எல். 2025; உள்ளூர் போட்டிகளைக் காண மாநகரப் பேருந்துகளில் இலவச பயணம்
x

Image Courtesy: @ChennaiIPL / File Image

ஐ.பி.எல். தொடரின் 18வது சீசன் வரும் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது.

சென்னை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

இந்த தொடரில் சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் 23ம் தேதி மும்பை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது. இந்நிலையில், சி.எஸ்.கே நிர்வாகம் தங்களது ரசிகர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, 2025 ஐ.பி.எல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை காண வரும் ரசிகர்கள், போட்டியின் டிக்கெட்டை காண்பித்து மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த இலவச பயணம் போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்க்குள் மட்டுமே செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சி.எஸ்.கே உள்ளூர் போட்டிகள் (சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகள்);

சென்னை - மும்பை; மார்ச் 23 - இரவு 7.30 மணி

சென்னை - பெங்களூரு; மார்ச் 28 - இரவு 7.30 மணி

சென்னை - டெல்லி; ஏப்ரல் 05 - மாலை 3.30 மணி

சென்னை - கொல்கத்தா; ஏப்ரல் 11 - இரவு 7.30 மணி

சென்னை - ஐதராபாத்; ஏப்ரல் 25 - இரவு 7.30 மணி

சென்னை - பஞ்சாப்; ஏப்ரல் 30 - இரவு 7.30 மணி

சென்னை - ராஜஸ்தான்; மே 12 - இரவு 7.30 மணி




Next Story