ஐ.பி.எல்.2025: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி அறிமுகம்

image courtesy: AFP
ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது.
சென்னை,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் மார்ச் 21-ம் தேதி தொடங்க உள்ளது.10 அணிகள் கலந்து கொள்ளும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 2 நாட்களாக ( நவம்பர் 24 & 25-ம் தேதிகளில்) நடைபெற்றது. இந்த ஏலத்தில் 577 வீரர்கள் பங்கேற்றனர். மொத்தத்தில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு விற்கப்பட்டனர்.
இந்த ஐ.பி.எல். தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்க உள்ளது. இந்த புதிய ஜெர்சியை சென்னை நிர்வாகம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிமுகம் செய்துள்ளது.
Related Tags :
Next Story