ஐ.பி.எல்.2025: சென்னை - மும்பை அணிகள் இன்று மோதல்

image courtesy:twitter/@IPL
நடப்பு ஐ.பி.எல். தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
சென்னை,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதன்படி மாலை 3.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற உள்ள போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதனையடுத்து இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. பலம் வாய்ந்த இரு அணிகளும் மோத உள்ளதால் இந்த ஆட்டம் ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story