3வது டி20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி


3வது டி20 கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி
x

3வது டி20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றிபெற்றது.

நவிமும்பை,

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இந்தியாவும், 2வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீசும் வெற்றிபெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி நேற்று நவி மும்பையில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீசை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றிபெற்றது. மேலும் , 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற புள்ளி கணக்கில் கைப்பற்றியது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story