இந்தியா - ஆஸ்திரேலியா 3-வது டெஸ்ட்: இன்று தொடங்குகிறது


இந்தியா - ஆஸ்திரேலியா 3-வது டெஸ்ட்: இன்று தொடங்குகிறது
x
தினத்தந்தி 14 Dec 2024 1:45 AM IST (Updated: 14 Dec 2024 1:46 AM IST)
t-max-icont-min-icon

தோல்வியில் இருந்து மீண்டு பதிலடி கொடுத்து தொடரில் முன்னிலை பெறும் ஆர்வத்துடன் இந்திய அணியினர் தயாராகி இருக்கின்றனர்.

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவும், அடிலெய்டில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

கடந்த ஆட்டத்தில் கண்ட தோல்வியில் இருந்து மீண்டு பதிலடி கொடுத்து தொடரில் முன்னிலை பெறும் ஆர்வத்துடன் இந்திய அணியினர் தயாராகி இருக்கின்றனர். ஆஸ்திரேலிய அணியை பொறுத்தமட்டில் முந்தைய ஆட்டத்தில் பெற்ற வெற்றி உற்சாகத்துடன் அடியெடுத்து வைக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பை பிரகாசப்படுத்த ஆஸ்திரேலிய அணியும், முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து இறுதிப்போட்டிக்கான வாய்ப்பில் நீடிக்க இந்திய அணியும் வரிந்து கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.இந்திய நேரப்படி அதிகாலை 5.50 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


Next Story