இந்தியா - ஆஸ்திரேலியா 3-வது டெஸ்ட்: மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு..? வெளியான தகவல்


இந்தியா - ஆஸ்திரேலியா 3-வது டெஸ்ட்: மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு..? வெளியான தகவல்
x

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவும், அடிலெய்டில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த போட்டி நடைபெறும் 5 நாட்களும் பிரிஸ்பேனில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போட்டி தொடங்கும் முன் அங்கு 60 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2-வது நாளில் 59 சதவீதம் மழையும், 3-வது நாளில் 60 சதவீதமும், கடைசி 2 நாட்களில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.


Next Story