147 ஆண்டு கால டெஸ்ட்... இங்கிலாந்து மண்ணில் முதல் ஆசிய அணியாக சாதனை படைத்த இலங்கை


147 ஆண்டு கால டெஸ்ட்... இங்கிலாந்து மண்ணில் முதல் ஆசிய அணியாக சாதனை படைத்த இலங்கை
x
தினத்தந்தி 10 Sep 2024 10:56 AM GMT (Updated: 10 Sep 2024 11:16 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அபார வெற்றி பெற்றது.

லண்டன்,

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

முன்னதாக இந்த தொடரின் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 219 ரன்கள் இலக்கை இலங்கை அணி வெற்றிகரமாக சேசிங் செய்தது.

இதன் மூலம் 147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்து மண்ணில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை சேசிங் செய்த முதல் ஆசிய அணி என்ற மாபெரும் வரலாற்று சாதனையை இலங்கை படைத்துள்ளது.

இதற்கு முன்னர் 2010-ம் ஆண்டு இங்கிலாந்தின் ஹெடிங்லேயில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் 180 ரன்களை சேசிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. இதில் இந்தியா அதிகபட்சமாக 1971-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக ஓவல் மைதானத்தில் 173 ரன்களை சேசிங் செய்துள்ளது.


Next Story