ஐ.சி.சி. சிறந்த வீரர் விருது 2024: பரிந்துரை பட்டியலில் இடம் பெற்ற இந்திய வீரர்.. யார் தெரியுமா..?

image courtesy: AFP
ஆண்டின் சிறந்த வீரருக்கு சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி விருது வழங்கப்படுகிறது.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இதில் ஆண்டின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுபவருக்கு 'சர் கார்பீல்ட் சோபர்ஸ் கோப்பை' விருது வழங்கி வருகிறது.
அதன்படி நடப்பாண்டின் (2024) சிறந்த வீரரை தேர்வு செய்ய 4 பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்துள்ளது. அதில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட், இங்கிலாந்தை சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுவார்.
Related Tags :
Next Story