எந்த இடத்திலும் விளையாட தயாராக உள்ளேன் - கே.எல்.ராகுல்


எந்த இடத்திலும் விளையாட தயாராக உள்ளேன் - கே.எல்.ராகுல்
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 5 Dec 2024 4:45 AM IST (Updated: 5 Dec 2024 4:46 AM IST)
t-max-icont-min-icon

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

அடிலெய்டு,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (பார்டர்-கவாஸ்கர் டிராபி) ஆடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி (பிங்க் பால் டெஸ்ட்) நாளை தொடங்குகிறது.

முதலாவது டெஸ்டில் ரோகித் சர்மா இல்லாததால் ஜெய்ஸ்வாலுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல் விளையாடினார். தற்போது ரோகித் சர்மா அணிக்கு திரும்பி விட்டதால் 2-வது டெஸ்டில் அவர் தொடக்க ஆட்டக்காரராக விளையாட வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால் லோகேஷ் ராகுல் பின்வரிசைக்கு தள்ளப்படுவார்

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து ராகுல் கூறியதாவது, பேட்டிங்கில் எந்த வரிசையிலும் விளையாட தயாராக இருக்கிறேன். ஆடும் லெவனில் இடம் கிடைத்தால் போதும். அது எந்த இடமாக இருந்தாலும் சரி, களம் கண்டு அணிக்காக பங்களிப்பு அளிக்க விரும்புகிறேன். இந்திய அணிக்காக பல வரிசையில் விளையாடி இருக்கிறேன்.

தொடக்க காலங்களில் முதல் 20-25 பந்துகளை எதிர்கொள்வது தொழில்நுட்ப ரீதியாக இல்லாமல் மனரீதியாக சற்று சவாலாக இருந்தது. எப்போது அதிரடி காட்ட வேண்டும்?, எவ்வளவு நேரம் எச்சரிக்கையாக ஆட வேண்டும்? போன்ற விஷயங்கள் மனதுக்குள் ஓடிக்கொண்டு இருக்கும்.

ஆனால் தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் பல இடங்களில் விளையாடி பழக்கப்பட்டு விட்டதால், எனது இன்னிங்சை எப்படி சமாளிக்க வேண்டும் என்ற திட்டம் என்னிடம் இருக்கிறது. நான் தொடக்க வீரராக விளையாடினாலும் சரி, மிடில் வரிசையில் விளையாடினாலும் சரி, முதல் 30-40 பந்துகளை சமாளித்து விட்டால், அதன் பிறகு எளிதாக ஆட முடியும். அதில் எனது கவனத்தை செலுத்த முயற்சிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story