2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே.. யாருக்கெல்லாம் இடம்..?


2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்த ஹர்ஷா போக்லே.. யாருக்கெல்லாம் இடம்..?
x
தினத்தந்தி 26 Dec 2024 11:38 AM IST (Updated: 26 Dec 2024 11:50 AM IST)
t-max-icont-min-icon

2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை ஹர்ஷா போக்லே தேர்வு செய்துள்ளார்.

மும்பை,

2024-ம் ஆண்டு இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ளது. இதனையொட்டி சில முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், வர்ணனையாளர்களும் நடப்பாண்டில் ஒவ்வொரு வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) சிறந்து விளங்கிய வீரர்களை கொண்டு சிறந்த அணிகளை தேர்வு செய்து அறிவிப்பது வழக்கம்.

அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே தான் தேர்வு செய்த 2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை அறிவித்துள்ளார். இந்த வருடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்திய வீரர்களை கொண்டு அவர் அணியை உருவாக்கியுள்ளார்.

அதில் சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வரும் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோருக்கு இடமளிக்கவில்லை.

கேப்டனாக பும்ராவை தேர்வு செய்துள்ள அவர், தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக ஜெய்ஸ்வாலை அணியில் சேர்த்துள்ளார். மேலும் ஜடேஜாவுக்கும் அணியில் இடம் கொடுத்துள்ளார்.

ஹர்ஷா போக்லே தேர்வு செய்த 2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி:-

பும்ரா (கேப்டன்), ஜெய்ஸ்வால், பென் டக்கெட், கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஹாரி புரூக், கமிந்து மெண்டிஸ், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, கஸ் அட்கின்சன், ரபடா.


Next Story