முதல் டெஸ்ட்: இலங்கை அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி


முதல் டெஸ்ட்:  இலங்கை அணியை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி
x

தென் ஆப்பிரிக்கா 233 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டர்பன்,

தென் ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி டர்பனில் கடந்த 27ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பந்து வீச்சை தேர்வு செய்தார்.அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா 191 ரன்களில் ஆல் அவுட் ஆனது. சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த பவுமா 70 ரன்களிலும், கேஷவ் மகராஜ் 24 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனையடுத்து இலங்கை முதல் இன்னிங்சை தொடங்கியது .தொடக்கம் முதல் தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி தடுமாறியது . மார்கோ ஜான்சனின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இலங்கை அணியில் 5 வீரர்கள் டக் அவுட் ஆகினர் .இறுதியில் இலங்கை அணி 13.5 ஓவர்களில் 42 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகளையும் இழந்தது .அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 13 ரன்கள் எடுத்தார் . தென் ஆப்பிரிக்க அணியில் மார்கோ ஜான்சன் 7விக்கெட்டுகளை வீழ்த்தினார் .

தொடர்ந்து 149 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 366 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அந்த அணியில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா ஆகியோர் சதமடித்து அசத்தினர் . இதனால் இலங்கை அணிக்கு 516 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 516 ரன்கள் இலக்குடன் விளையாடிய இலங்கை 282 ரன்களில் 10 விக்கெட்டுகளை இழந்து ஆட்டமிழந்தது..

அந்த அணியில் தினேஷ் சண்டிமால் 83 ரன்கள், தனஞ்செயா டி செல்வா 59 ரன்கள் எடுத்தனர். இதனால் தென் ஆப்பிரிக்கா 233 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


Next Story