9 பந்தில் 35 ரன்கள் விளாசிய வீரர் மீது ரூ. 500 நோட்டுகளை தூவிய ரசிகர் - வீடியோ


9 பந்தில் 35 ரன்கள் விளாசிய வீரர் மீது ரூ. 500 நோட்டுகளை தூவிய ரசிகர் - வீடியோ
x

கோப்புப்படம்

9 பந்தில் 35 ரன்கள் விளாசிய வீரர் மீது ரூ. 500 நோட்டுகளை தூவி ரசிகர் ஒருவர் பாராட்டி உள்ளார்.

பிவண்டி,

மகாராஷ்டிரா மாநிலம் பிவண்டி என்ற நகரில் உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் நடந்த போட்டியில் ஒரு வீரர் 9 பந்துகளில் 35 ரன்கள் விளாசியுள்ளார். இவரது ஆட்டத்தை பார்த்து ரசித்த பார்வையாளர் ஒருவர் உடனடியாக மைதானத்திற்குள் நுழைந்து அந்த பேட்ஸ்மேன் மீது ரூ. 500 நோட்டுகளை தூவி பாராட்டினார்.

அதுமட்டுமல்லாமல் அவருக்கு கன்னத்தில் முத்தமிட்டு சென்றார். இதனையடுத்து சுற்றியிருந்த பார்வையாளர்கள் அந்த ரூ.500 நோட்டுகளை எடுத்து செல்ல மைதானத்திற்குள் வந்தனர். அந்த பேட்ஸ்மேனும் பணத்தை பார்வையாளர்களுக்கு எடுத்து கொடுத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




Next Story