இங்கிலாந்து வெற்றி: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நிகழ்ந்த மாற்றம் என்ன..?


இங்கிலாந்து வெற்றி: டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் நிகழ்ந்த மாற்றம் என்ன..?
x

image courtesy: ICC

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

கிறிஸ்ட்சர்ச்,

நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. இதில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இதில் நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்ற இங்கிலாந்து கூடுதலாக புள்ளிகள் பெற்ற நிலையில் அதே இடத்தில் (6-வது இடம்) நீடிக்கிறது.

மறுமுனையில் தோல்வி கண்ட நியூசிலாந்து சில புள்ளிகளை இழந்த நிலையில் 4-வது இடத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. மேலும் இந்த தோல்வியின் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் முன்னேறுவதில் நியூசிலாந்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்:-

1. இந்தியா - 61.11 சதவீதம்

2. தென் ஆப்பிரிக்கா -59.26 சதவீதம்

3. ஆஸ்திரேலியா - 57.69 சதவீதம்

4. நியூசிலாந்து/இலங்கை - 50.00 சதவீதம்

6. இங்கிலாந்து - 43.75 சதவீதம்

7. பாகிஸ்தான் - 33.33 சதவீதம்

8. வெஸ்ட் இண்டீஸ் - 26.67 சதவீதம்

9. வங்காளதேசம் - 25.00 சதவீதம்


Next Story