வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; தென் ஆப்பிரிக்கா அணியிலிருந்து முக்கிய வீரர் விலகல்


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; தென் ஆப்பிரிக்கா அணியிலிருந்து முக்கிய வீரர் விலகல்
x

image courtesy: ICC

தினத்தந்தி 26 July 2024 9:59 AM IST (Updated: 26 July 2024 10:59 AM IST)
t-max-icont-min-icon

வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்க உள்ளது.

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கெதிராக 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடரில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ் போட்டி ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்குகிறது. இந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் ஆகும். எனவே இந்த தொடர் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. டெம்பா பவுமா தலைமையிலான அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி இடம்பெற்றிருந்தார்.

இந்நிலையில் காயம் காரணமாக இந்த டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதாக ஜெரால்ட் கோட்ஸி அறிவித்துள்ளார். அவருக்கு பதிலாக புதுமுக வீரரான மிகேல் பிரிட்டோரியஸ் அணியில் சேர்க்கபட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணி விவரம் பின்வருமாறு:-

டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ ப்ரீட்ஸ்கே, நந்த்ரே பர்கர், டோனி டி ஜோர்ஜி, கேசவ் மகராஜ், எய்டன் மார்க்ரம், வியான் முல்டர், லுங்கி நிகிடி, டேன் பேட்டர்சன், டேன் பீட், மைக்கேல் பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ரிக்கெல்ப்ஸ், ரியான் ரிக்கெல்டன் மற்றும் கைல் வெர்ரைன்


Next Story