சாம்பியன்ஸ் டிராபி: தென் ஆப்பிரிக்க அணியில் நோர்ட்ஜேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு


சாம்பியன்ஸ் டிராபி: தென் ஆப்பிரிக்க அணியில் நோர்ட்ஜேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு
x

image courtesy: AFP

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகிய நோர்ட்ஜேவுக்கு மாற்று வீரர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கேப்டவுன்,

8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டன. இருப்பினும் அந்த அணியில் ஏதாவது மாற்றங்கள் இருந்தால் வருகிற 11-ஆம் தேதிக்குள் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்று ஐ.சி.சி. கெடு விதித்திருக்கிறது. இதன் காரணமாக அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் தங்களது அணியில் காயமடைந்துள்ள வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை தேர்வு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

அந்த வரிசையில் சாம்பியன்ஸ் டிராபிக்கான தென் ஆப்பிரிக்க அணியிலிருந்து காயம் காரணமாக விலகிய அன்ரிச் நார்ட்ஜேவுக்கு மாற்று வீரராக கார்பின் போஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் ரிசர்வ் வீரராக குவேனா மபாகாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி விவரம் பின்வருமாறு:-

டெம்பா பவுமா (கேப்டன்), கார்பின் போஷ், டோனி டி ஜோர்ஜி, மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மகராஜ், மார்க்ரம், டேவிட் மில்லர், வியான் முல்டர், லுங்கி நிகிடி, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் ரஸ்சி வாண்டெர் துசென்

ரிசர்வ் வீரர்: குவேனா மபாகா


Next Story