சாம்பியன்ஸ் டிராபி தொடர்; வங்காளதேச அணி அறிவிப்பு
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
டாக்கா,
8 அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்த தொடருக்கான அணிகளை அறிவிக்க இன்றே இறுதி நாளாகும்.
இந்நிலையில், இந்த தொடருக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் சீனியர் வீரர்களான முஷ்பிகுர் ரஹீம், மஹ்மத்துல்லா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அதே சமயம் மற்றொரு முன்னணி வீரரான ஷகிப் அல் ஹசனுக்கு இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை.
வங்காளதேச அணி விவரம்: நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), மெஹிதி ஹசன் மிராஸ், சவுமியா சர்கார், தன்சித் ஹசன், தன்சித் ஹ்ரிடோய், முஷ்பிகுர் ரஹீம், மஹ்மதுல்லா, ஜாக்கர் அலி, ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், பர்வேஸ் ஹொசைன், நசும் அகமது, தன்சிம் ஹசன் சகிப், நஹித் ராணா.