சாம்பியன்ஸ் டிராபி: ரசிகர்களை கவர்ந்த ஹர்திக் பாண்ட்யாவின் வாட்ச்.. விலை இத்தனை கோடியா..?


சாம்பியன்ஸ் டிராபி: ரசிகர்களை கவர்ந்த ஹர்திக் பாண்ட்யாவின் வாட்ச்.. விலை இத்தனை கோடியா..?
x

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோதின.

துபாய்,

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் அரையிறுதி வாய்ப்பையும் ஏறக்குறைய உறுதி செய்து விட்டது.

அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.4 ஓவர்களில் 241 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாத் ஷகீல் 62 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 244 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கோலி 100 ரன்கள் அடித்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா கட்டியிருந்த வாட்ச் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. பாபர் அசாமின் விக்கெட்டை கைப்பற்றிய பாண்ட்யா அதனை கொண்டாடும்போது ரசிகர்கள் அவர் கட்டியிருந்த வாட்சை கவனித்தனர். கிரிக்கெட் வீரர்கள் பெரும்பாலும் களத்தில் இப்படி வாட்ச்கள் அணிவதில்லை. இது பலரது மத்தியில் பேசு பொருளானது.

பின்னர் இந்த வாட்ச் குறித்து பல செய்திகள் வெளியாகின. அதில் ஹர்திக் பாண்ட்யா கட்டியிருந்த வாட்ச் ஏறக்குறைய ரூ. 7 கோடி மதிப்பிலான ரிச்சர்ட் மில்லே ஆர்எம் 27-02 வகையை சேர்ந்தது என்றும் உலகிலேயே இந்த வாட்ச் வெறும் 50 எண்ணிக்கையில்தான் தயாரிக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளன.


Next Story